கல்வி எழுச்சியின் தேவை
கடந்த காலங்களில் இஸ்லாமியர்கள் அறிவியல், மருத்துவம், கணிதம், வானியல் போன்ற பல துறைகளில் ஆதிக்கம் செலுத்தி உலகிற்கு முன்னோடிகளாக திகழ்ந்து வந்தோம். ஆனால் காலப்போக்கில், சமூக சீர்கேடுகள், காலனிய அடிமைத்தனம் மற்றும் அரசியல் பின்னடைவுகள் காரணமாக இஸ்லாமியர்களின் கல்வி வளர்ச்சி தடுமாறியது. இன்று நம்முடைய தியாகங்கள், மறைக்கப்பட்டு வரலாறு தெரியாமல் கல்வியறிவில் பின்தங்கி வெளிநாடுகளுக்கு சென்று கூலி வேலை பார்க்கும் அவல நிலையில் உள்ளோம்.
நபியே நீர் ஓதுவீராக! (படிப்பீராக) என்ற முதல் குர்ஆனிய வார்த்தைகளும், “கல்வி கற்பது ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் மீது கட்டாயக் கடமை’ என்கிற நபிமொழி வாக்கியங்களும், இஸ்லாம் அறிவின் தேடலுக்கு எவ்வகையான முக்கியத்துவத்தை அளிக்கிறது என்பதைக் குறித்து நமக்கு விளக்குகிறது. கல்வியை தேடி செல்வது கூட ஒரு வணக்கம் என்பதை குர்ஆன், ஹதீஸ் செய்திகளின் மூலம் நாம் உணரலாம்.
எதிர்கால இஸ்லாமிய சமூகத்தின் எழுச்சி அறிவு, அறம், ஒழுக்கம் சார்ந்த இறைஅச்சத்தின் அடிப்படையிலான கல்வி வழியாக மட்டுமே சாத்தியமாகும்.
கல்வி சாம்ராஜ்ஜியத்தில் இழந்த நம்முடைய அடையாளத்தை மீட்கவும், எதிர்கால இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டவும், ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக எதிர்வரும் ஜுன் 29, 2025ல் திருச்சியில் கல்வி எழுச்சி மாநாடு ஏற்பாடு செய்துள்ளோம். இன்ஷா அல்லாஹ்..
அறிவுசார் சமூக படைக்க நம்முடைய ஒவ்வொருவரின் பங்களிப்பும் இந்த மாநாட்டின் நோக்கம் வெற்றியடைய தேவைப்படுகிறது. வளமான வரலாறு படைக்க அனைவரும் வருகை தாருங்கள்!
கல்வி எழுச்சி மாநாட்டுக் குழு Educon 2025
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்